கள்ளிலும் பால்- ஜி. ராகவன்

ஜி. ராகவன் - கள்ளிலும் பால்

கதைச் சுருக்கம் : சென்னையில் சந்தியா. ஆம்ஸ்டர்டாமில் சரவணன். இருவருக்கும் நட்பா.....நட்பில் குழந்தை பிறக்குமா?

"ஆகா. அப்ப ஊருல இருக்குற பொண்ணுங்கள்ளாம் இதே மாதிரி கொழந்த பெத்துக்கிட்டா சந்தியா செஞ்சதும் சரியாயிரும் இல்ல! அண்ணன் செய்ற தப்புகள ஏத்துக்குற ஒனக்கு ஒரு பொண்ணு கொழந்த பெத்துக்கிறத ஏத்துக்க முடியலை. ம்ம்ம். லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும். நீ மட்டுமில்லம்மா...ரொம்பப் பேரு இப்பிடித்தான். ஒன்னைய மட்டும் சொல்லி என்ன புண்ணியம்."